தென்றலில் மயிலிறகுபோல்
அசைகிறாய்
என்னை தொட்டுவிடாமல்
உரசிச்செல்லும்
உன் மூக்கின் நுனி
என் வியர்வை துளிகளை
எரித்துக்கொண்டிருக்கும்
உன் மூச்சின் வெப்பம்
உன்னில் உதித்து
என்னில் கடந்து
உன்னிலே முடியும்
இரத்த ஓட்டம்
மங்கி எரியும்
விளக்குகள் நிறைந்த தெருவின்
அமைதியை
சன்னமாக கலைக்கும்
உன் சிணுங்கல்
உன்னில் தொலைத்துக்கொண்டிருக்கிறேன்
என் தனிமை இரவுகளை!!!
Tuesday, July 6, 2010
Monday, June 7, 2010
நம் முதல் சந்திப்பில்
நம் முதல் சந்திப்பில்
மௌனத்தை மட்டுமே
பரிமாறிக்கொண்டதாய்
நினைத்திருந்தோம்
எனது நினைவுகளுக்கு
எட்டாதபடி
உனது வார்த்தைகள்
என் இதயத்தில்
தந்தியடித்துக்கொண்டிருந்தது
-Boo
மௌனத்தை மட்டுமே
பரிமாறிக்கொண்டதாய்
நினைத்திருந்தோம்
எனது நினைவுகளுக்கு
எட்டாதபடி
உனது வார்த்தைகள்
என் இதயத்தில்
தந்தியடித்துக்கொண்டிருந்தது
-Boo
Friday, June 4, 2010
புடவை வாங்க
புடவை வாங்க
போனதாய் சொன்னாய்
கடைக்காரன் கண்டிப்பாய்
ஆச்சர்யப்பட்டிருக்க வேண்டும்!
பட்டுப்புடவை கடையில்
வண்ணத்துப்பூச்சி!
-Boo
போனதாய் சொன்னாய்
கடைக்காரன் கண்டிப்பாய்
ஆச்சர்யப்பட்டிருக்க வேண்டும்!
பட்டுப்புடவை கடையில்
வண்ணத்துப்பூச்சி!
-Boo
எச்சில் தொட்டு
எச்சில் தொட்டு
ஒட்ட வைக்காதே
எந்த அஞ்சல் தலைகளையும்.
உன் இதழ் தொடும்
அந்த தூரத்தில்
மகாத்மாவாய் இருந்தாலும்
மன்னிக்க மறுக்கிறது
மனது.
-Boo
ஒட்ட வைக்காதே
எந்த அஞ்சல் தலைகளையும்.
உன் இதழ் தொடும்
அந்த தூரத்தில்
மகாத்மாவாய் இருந்தாலும்
மன்னிக்க மறுக்கிறது
மனது.
-Boo
உன் உயிர் சுமந்து வரும்
உன்
உயிர் சுமந்து வரும் கடிதங்களின்
கண்ணீர் கறை படிந்த பக்கங்களில்
நீ எழுதி முடிக்காத
மௌன வார்த்தைகளின்
அர்த்தங்களை மொழிபெயர்த்துக்கொண்டு
நமக்கிடையேயான தூரத்தினை
காற்றினிலேறி கடந்துகொண்டிருக்கிறேன் ...
தென்றலால் உன் கண்ணீர் துடைக்க
மௌவ்வல்கள் முத்தங்களோடு
மாலையில் மலரும்.
அதுவரை காத்திரு...
-Boo
உயிர் சுமந்து வரும் கடிதங்களின்
கண்ணீர் கறை படிந்த பக்கங்களில்
நீ எழுதி முடிக்காத
மௌன வார்த்தைகளின்
அர்த்தங்களை மொழிபெயர்த்துக்கொண்டு
நமக்கிடையேயான தூரத்தினை
காற்றினிலேறி கடந்துகொண்டிருக்கிறேன் ...
தென்றலால் உன் கண்ணீர் துடைக்க
மௌவ்வல்கள் முத்தங்களோடு
மாலையில் மலரும்.
அதுவரை காத்திரு...
-Boo
Sunday, May 23, 2010
மொட்டவிழ்க்காத மலர்கள்
மொட்டவிழ்க்காத மலர்கள்
சேமித்து வைக்கின்றன
வாசனையை...
பொழிந்திடாத மேகம்
சேமித்து வைக்கிறது
முதல் மழைத்துளியை...
வெள்ளை குளிர்காலம்
சேமித்து வைக்கிறது
வசந்தத்தின் வண்ணங்களை...
தூரிகைகள்
சேமித்து வைக்கின்றன
அழகான ஓவியங்களை...
வாசனையும் மழைத்துளியும்
வண்ணங்களும் ஓவியமும்
பிறக்கும் நொடிகள்
சேமித்து வைத்திருக்கின்றன
முதல் குழந்தை பெற்றெடுக்கும்
தாயின் சந்தோசங்களை....
அதுபோல்
என் முதல் முத்தமும்....
-Boo
சேமித்து வைக்கின்றன
வாசனையை...
பொழிந்திடாத மேகம்
சேமித்து வைக்கிறது
முதல் மழைத்துளியை...
வெள்ளை குளிர்காலம்
சேமித்து வைக்கிறது
வசந்தத்தின் வண்ணங்களை...
தூரிகைகள்
சேமித்து வைக்கின்றன
அழகான ஓவியங்களை...
வாசனையும் மழைத்துளியும்
வண்ணங்களும் ஓவியமும்
பிறக்கும் நொடிகள்
சேமித்து வைத்திருக்கின்றன
முதல் குழந்தை பெற்றெடுக்கும்
தாயின் சந்தோசங்களை....
அதுபோல்
என் முதல் முத்தமும்....
-Boo
Subscribe to:
Posts (Atom)